தனது பொறியியல் அறிவைப் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்திருக்கிறார் ஜோசப் என்னும் விவசாயி.

64 வயதான ஜோசப் அடிப்படையில் ஒரு கணிப்பொறி பொறியாளர். அமெரிக்காவின் தொழில்நுட்ப நகரான சிலிக்கன் வேலியில் பணிபுரிந்த அவர், ஒரு விவசாயி என்றே அறியப்பட விரும்புகிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தூகல் என்னும் இடத்தில் 75 ஏக்கர் அளவில் நிலத்தை வைத்திருக்கும் ஜோசப், அங்கே 13 வகையான இயற்கையான பயிர்களை பயிரிட்டு வருகிறார். இவை அனைத்தும், அண்டையில் உள்ள மற்ற தோட்டத்து விவசாயிகளால் பெரிய அளவில் வளர்க்கப்படாத வகைகள். அவையனைத்தும் மற்ற விவசாயிகளால் வணிக ரீதியாக பெரியளவில் விளைச்சலைத் தராத வகைகளாகவே பார்க்கப்படுகிறது.